பெண்களை ஆடையுடன் தொடுவது பாலியல் துன்புறுத்தல் ஆகாது என்று சர்ச்சைக்குரிய தீர்ப்பு வழங்கிய மும்பை உயர்நீதிமன்ற நீதிபதி புஷ்பா கனேதிவாலாவின் பதவி காலம் ஓராண்டாக குறைக்கப்பட்டுள்ளது.
நீதிபதி புஷ்பா கனேதிவாலாவின் வங்கிகள் மற்றும் காப்பீட்டு நிறுவனங்களான வழக்கறிஞர் குழுவில் பணியாற்றினார். அமராவதியின் பல்வேறு கல்லூரிகளில் கௌரவ விரிவாகவும் இருந்துள்ளார். 2007-இல் நேரடியாக மாவட்ட நீதிபதியாக நியமிக்கப்பட்ட இவர் 2019 மும்பை உயர்நீதிமன்ற கிளையில் நீதிபதியாக பணியாற்றினார். ஜனவரி 19 அன்று போஸ்கோ சட்டத்தின்கீழ் பதியப்பட்ட வழக்கை விசாரித்த இவர் தோளோடு தோள் தொடர்பின்றி சிறுமியின் மார்பகத்தை பிடிப்பது சட்டப்படி குற்றம் இல்லை என்று தீர்ப்பு அளித்தார். இது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
5 வயது சிறுமி பாலியல் தொல்லையால் பாதிக்கப்பட்ட மற்றொரு வழக்கை விசாரித்தவர், சிறுமியின் கையை பிடித்து இழுப்பது, பேன்ட் ஜிப்பை திறப்பதோ பாலியல் வன்முறை ஆகாது என கூறி குற்றம் சாட்டப்பட்டவரை வெளியே விடுவித்தார். இந்த தீர்ப்புகளை நிறுத்திவைத்து உச்ச நீதிமன்றம், அவர் மீது வழக்கு தொடர அரசுக்கு அனுமதி வழங்கியது. இந்நிலையில் இரண்டு ஆண்டுகாலம் இருந்த அவரது பதவி உயர்வு காலம் ஒரு ஆண்டாக குறைக்கப்பட்டு அரசு அறிவித்துள்ளது.