Categories
சினிமா தமிழ் சினிமா

பிரபல நடிகையின் ஆடை குறித்த சர்ச்சை….. பொய்யான விளக்கமளித்த நடிகர் சதீஷ்‌.‌…. கண்டனம் தெரிவித்த இயக்குனர்….!!!!!

பாலிவுட் சினிமாவில் கவர்ச்சியான நடிகையாக வலம் வரும் சன்னி லியோன் தமிழில் ஓ மை கோஸ்ட் என்ற திரைப்படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் சென்னையில் நடைபெற்ற போது ஓ‌ மை கோஸ்ட் பட குழுவினர் அனைவரும் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியின் போது நடிகர் சதீஷ் ஹிந்தி நடிகையான சன்னி லியோன் அழகாக பட்டுப் புடவையில் வந்திருக்கிறார் என்றும், கோயம்புத்தூர் பெண்ணான தர்ஷா குப்தா கவர்ச்சி உடையில் வந்திருக்கிறார் என்றும் கூறினார்.

இது தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், பாடகி சின்மயி மற்றும் இயக்குனர் நவீன் போன்றோர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். இதனால் இது தொடர்பான சம்பவத்திற்கு நடிகர் சதீஷ் விளக்கம் அளித்து ஒரு டுவிட்டர் பதிவை வெளியிட்டு இருந்தார். அதில் நான் நடிகை தர்ஷா குப்தாவின் அனுமதி யோடுதான் மேடையில் அவ்வாறு பேசினேன் என்று குறிப்பிட்டிருந்தார். அதோடு இயக்குனர் நவீனை மூடர் என்பது போன்று பதிவிட்டு இருந்தார்.

இந்த பதிவுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக நடிகை தர்ஷா குப்தாவும் ஒரு டுவிட்டர் பதிவை வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டிருப்பதாவது, ‌ ‌ நடிகர் சதீஷ் இந்த விஷயத்தை என் பக்கம் திருப்பி விடுவது மிகவும் விசித்திரமாக இருக்கிறது.  மேடையில் நின்று யாராவது தன்னைப் பற்றியே அசிங்கமாக பேசுங்கள் என்று கூறுவார்களா?. எனக்கு அன்னைக்கு ரொம்ப கோவம் வந்துச்சு. இருந்தாலும் நான் பெருசா காட்டிக்கல.

இன்னைக்கு இப்படி பேசறது கொஞ்சம் கூட சரி கிடையாது என்று பதிவிட்டுள்ளார். இவர்களின் பதிவுகளை குறிப்பிட்டு இயக்குனர் சதீஷ் மீண்டும் ஒரு டுவிட்டர் பதிவை வெளியிட்டுள்ளார். அதில் இரண்டு நண்பர்களுக்குள் பேசிக் கொண்டது என்று சதீஷ் கூறியுள்ளார். ஆனால் தர்ஷாவோ நீங்க பொய் சொல்றீங்க என்று மறுத்துள்ளார். அதோடு நீங்க பேசியது எனக்கு மிகவும் கஷ்டமாக இருந்தது என்றும் கூறியுள்ளார்‌. மேலும் இந்த பதிவால் மீண்டும் பிரச்சனை சர்ச்சையாக மாறியுள்ளது என்று கூறியுள்ளார்.

Categories

Tech |