Categories
தேசிய செய்திகள்

அமைச்சரின் மகனைத் தடுத்து நிறுத்திய பெண் போலீஸ் பணியிடமாற்றம்

ஊரடங்கின்போது வெளியில் சுற்றித்திரிந்த அமைச்சரின் மகனைத் தடுத்துநிறுத்திய பெண் போலீஸ் பணியிட மாற்றம் செய்யப்பட்டிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

நாட்டில் கொரோனா வைரஸ் நாளுக்கு நாள் அதிகரித்துவரும் நிலையில், அதனை கட்டுப்படுத்தும் நோக்கில் நாடு முழுவதும் கடந்த மார்ச் 25ஆம் தேதி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு, சில தளர்வுகளுடன் ஜூலை 31ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில், குஜராத் மாநிலத்தில் அறிவிக்கப்பட்டிருந்த ஊரடங்கு விதிகளையும் மீறி அம்மாநில சுகாதாரத் துறை அமைச்சர் குமார் கனானியின் மகன் பிரகாஷ் கனானி மற்றும் அவர்களது நண்பர்கள் தேவையின்றி வெளியில் சுற்றித் திரிந்துள்ளனர்.

இவர்களை, வராச்சா சாலையில் சூரத் காவல் நிலையத்தில் பணியாற்றும் பெண் காவலர் சுனிதா யாதவ் (Sunita Yadav) தடுத்து நிறுத்தியுள்ளார். அப்போது கோபமடைந்த பிரகாஷ் கனானி, பெண் காவலருக்கு மிரட்டல் விடுக்கும் வகையில் பேசியுள்ளார்.. பதிலுக்கு அந்த பெண் போலீசும் சாலையில் சுற்றித்திரிய உங்களுக்கு யார் அதிகாரம் கொடுத்தது என கண்டித்துள்ளார்.. அந்த வெளியாகி சமூக வலைதளங்களில்  பேசு பொருளாகியுள்ளது. அமைச்சரின் மகனுக்கு எதிராகவும், பெண் காவலருக்கு ஆதரவாகவும் பலரும் கருத்துக்கள் தெரிவித்து வருகின்றனர்.

இதற்கிடையே அமைச்சரின் மகன் மற்றும் அவரது நண்பர்கள்  கைதுசெய்யப்பட்டு, ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர். இந்த சூழலில், பெண் போலீஸ் சுனிதா யாதவ் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சம்பவத்திற்குப் பிறகு சுனிதா யாதவ் மருத்துவ விடுப்பில் சென்றுள்ளார்.. அரசியல் அழுத்தம் காரணமாக இவர் பணியிட மாற்றம் செய்யப்பட்டிருக்கலாம் என பலரும் ஆதங்கத்துடன் கருத்து தெரிவித்துவருகின்றனர்.

Categories

Tech |