Categories
சினிமா தமிழ் சினிமா

சர்ச்சையில் சிக்கிய விஜய் டிவி பிரபலம்…. இணையத்தில் கொந்தளிக்கும் நெட்டிசன்கள்….!!!

விஜய் தொலைக்காட்சியின் ஒளிபரப்பான குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் மிகவும் பிரபலமானவர் புகழ். இந்த நிகழ்ச்சியில் கிடைத்த வரவேற்பின் மூலம் புகழுக்கு சினிமாவில் நடிப்பதற்கு வாய்ப்பு கிடைத்தது. இவர் வலிமை, பீஸ்ட் உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார். அதன் பிறகு ஜூ‌ கீப்பர் என்ற திரைப்படத்தின் மூலம் தற்போது ஹீரோவாகவும் நடித்துக் கொண்டிருக்கிறார். இவர் தான் நீண்ட நாளாக காதலித்த பென்சியா என்ற பெண்ணை சமீபத்தில் திருமணம் செய்து கொண்டார்.

இந்நிலையில் தற்போது புகழ் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் புகழ் ஹெல்மெட் அணியாமல் பைக் ஓட்டுகிறார். இதை பார்த்த நெடிசன்கள் டிகே வாசனுக்கு மட்டும்தான் நடவடிக்கை எடுப்பீர்களா? ஹெல்மட் அணியாமல் இளைஞர்களை தப்பான வலிக்கு அழைத்து செல்லும் புகழ் மீது நடவடிக்கை எடுக்க மாட்டீர்களா என இணையதளத்தில் கொந்தளித்துள்ளனர். மேலும் புகழ் வெளியிட்ட வீடியோவும் தற்போது இணையதளத்தில் வைரல் ஆகிறது.

Categories

Tech |