ஓடிடியில் வெளியாகும் படங்கள் மற்றும் தொடர்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் என்று மத்திய அமைச்சர் தெரிவித்துள்ளார்.
கொரோனா பரவல் காரணமாக திரையரங்குகள் மூடப்பட்டன. இதையடுத்து படங்கள் திரையரங்குகளில் வெளியாகாமல் ஓடிடியில் வெளியிடப்பட்டு வந்தது. இதனால் வீட்டில் இருந்தே அனைத்து படங்களையும் சவுகரியமாக பார்த்துவிட முடியும். இந்நிலையில் ஓடிடி தளங்களில் வெளியாகும் படங்கள், தொடர்களுக்கு கட்டுப்பாடுகள் குறித்து விரைவில் வழிகாட்டுதல் வெளியிடப்படும் என மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார்.
ஓடிடி தளங்களில் வெளியாகும் சில தொடர்கள், படங்களுக்கு எதிராக ஏராளமான புகார்கள் வருவதால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளவுள்ளதாக அவர் கூறியுள்ளார். மேலும் திரையரங்குகளில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்ற வேண்டும் என்று கூறியுள்ளார்.