லக்னோவில் டெல்லி மாணவர்கள் தாக்கப்பட்டதைக் கண்டித்து கல்லூரி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதை தொடர்ந்து காவல்துறை மற்றும் மாணவர்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டுள்ளது.
டெல்லியில் குடியுரிமை மசோதா குடியுரிமை திருத்த மசோதாவிற்கு எதிராக பல்கலைக்கழக மாணவர்கள் மத்திய பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டம் நடத்தியதில் வன்முறை ஏற்பட்டு காவல்துறையினர் மாணவர்களை கொடூரமாக தாக்கிய சம்பவங்களை கண்டித்து இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் மற்ற கல்லூரி மாணவர்கள் தொடர் போராட்டங்களை மேற்கொண்டு வருகின்றனர்.
அந்தவகையில், லக்னோவில் கல்லூரி மாணவர்கள் குடியுரிமை மசோதாதாவிற்கு எதிராகவும் காவல்துறையினரின் வன்முறைக்கு எதிராகவும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். முதலில் அமைதியாக ஆரம்பிக்கப்பட்ட இந்தப் போராட்டம் பின் மாணவர்கள் கொடூரமாக தாக்கப்பட்டதை எண்ணி ஆத்திரம் அடைந்து வன்முறை வடிவம் பெற்று காவல்துறையினருக்கும் மாணவர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது.
இந்த மோதலில் காவல்துறையினரும் மாணவர்களும் மாறிமாறி செருப்பு மற்றும் கற்களை வீசி தாக்குதல் நடத்தி வருகின்றனர். இதனை கட்டுப்படுத்த முடியாமல் கூடுதல் காவலர்களை வரவழைக்க உத்திரபிரதேச காவல்துறை திட்டமிட்டுள்ளது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.