மாணவர்களிடையே தன்னம்பிக்கையை வளர்க்கவும், விழிப்புணர்வை ஏற்படுத்தவும், தற்கொலைகளை தடுக்கவும் சரியான திட்டங்களை தீட்டி செயல்படுத்த தற்கொலைக்கு காரணம் என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
நீட் தேர்வுக்கு எதிராக தமிழகத்தில் ஒவ்வொரு ஆண்டும் மாணவர்கள் பலர் தற்கொலை செய்து கொள்வது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மற்ற மாநிலங்களில் இல்லாத அளவிற்கு தமிழகத்தில் அதிகளவில் தற்கொலை நடப்பது ஏன் ? என்ற கேள்வி எழுந்துள்ளது. ஒவ்வொரு அரசு பள்ளிகளிலும் ஒரு மனநல ஆலோசகர்களை நியமிக்க நடவடிக்கை எடுக்காதது ஏன் ? என்பது சமூக ஆர்வலர்களின் கேள்வியாக உள்ளது.
மாணவர்களுக்கு முறையாக கலந்தாய்வு அளிக்கவும், தன்னம்பிக்கையை ஏற்படுத்தவும் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியமாக உள்ளது. உயர்கல்வியில் உள்ள படிப்புகள் எத்தனை ? என்னென்ன வேலைவாய்ப்புகள் உள்ளன ? என்பது குறித்த ஒரு வழிகாட்டி நிகழ்ச்சி தொடங்கப்பட்ட ஒரே ஆண்டில் மூடப்பட்டது.
உயர்கல்வியில் மருத்துவம் மட்டும் படிப்பல்ல, அதையும் தாண்டி ஏராளமான படிப்புகள் இருக்கிறது என்பதை வெளிப்படுத்துவதாக அந்த நிகழ்ச்சி அமைந்தது. இது போன்ற ஒரு நல்ல நிகழ்வைத் தொடர்ந்து நடத்துவதற்கு நடவடிக்கை எடுக்காதது ஏன் ? என்பதும் மிகப்பெரிய கேள்வியாக உள்ளது. இனி வரும் காலங்களிளாவது மாணவர்கள் தற்கொலையை தடுத்து நிறுத்த பள்ளிக்கல்வித்துறை உருப்படியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதுதான் அனைவரின் எதிர்பார்ப்பாகவும் உள்ளது.