Categories
தேசிய செய்திகள்

” இந்த தருணத்தில் எங்களுக்கு உதவிய இந்தியாவிற்கு நன்றி!” -மோடிக்கு கோத்தபய ராஜபக்சே ட்வீட்

கொரோனா தடுப்புக்காக மலேரியாவுக்கு கொடுக்கப்பட்ட ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் மருந்தை இந்தியா தர வேண்டும் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் கேட்டிருந்தார். இந்தியாவில் உள்நாட்டு பயன்பாட்டு பற்றாக்குறையாக மாறிவிடக் கூடாது என்பதால் இந்த மருந்தை மற்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யக் கூடாது என்று தடை விதிக்கப்பட்டிருந்து.

இந்நிலையில்  அமெரிக்காவின் கோரிக்கையை ஏற்று அந்நாட்டிற்க்கு மனிதாபிமான அடிப்படையில் மருந்து கொடுப்பதாக இந்திய வெளியுறவுத்துறை தெரிவித்தது.  இதைத்தொடர்ந்து  ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் மருந்தை  இந்தியா அமெரிக்காவிற்கு  கொடுத்து உதவி செய்தது.

மேலும் இலங்கை  அரசும்  ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் மருந்தை  இந்திய  அரசிடம் கேட்டிருந்தது. இதையெடுத்து  இலங்கையின் கோரிக்கையை ஏற்று சிறப்பு விமானத்தின் மூலம்  10 டன் மருந்துகளை இந்தியா இலங்கைக்கு அனுப்பி வைத்துள்ளது.

இதற்கு, இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே ட்விட்டர் மூலம் நன்றி தெரிவித்துள்ளார்.

“இந்திய அரசுக்கும், மக்களுக்கும் தேவைப்படும் இந்தத் நேரத்தில்  உங்களின் தாராளமான மனதுக்கு எங்களின் பாராட்டுகள்’ எனக் குறிப்பிட்டுள்ளார்.

 

Categories

Tech |