தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியதிலிருந்து பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இந்த கனமழையின் காரணமாக சென்னை உட்பட பல்வேறு பகுதிகளில் மக்கள் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். இந்நிலையில் சென்னையில் தொடர்ந்து மழை பெய்து வருவதன் காரணமாக முக்கிய விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளது. அதன்படி சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் முக்கிய விமான சேவைகள் ரத்து செய்யப் பட்டுள்ளது. அதாவது அதிகாலை 4:55 மணிக்கு ஹைதராபாத் செல்ல வேண்டிய விமானம் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து காலை 6:15 மணிக்கு மதுரைக்கு செல்ல வேண்டிய விமானம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
இதேபோன்று பகல் 1:10 மணிக்கு கர்னூல் செல்ல வேண்டிய விமானம், மாலை 5:10 மணிக்கு மதுரைக்கு செல்ல வேண்டிய விமானம் போன்றவைகளும் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து மும்பையில் இருந்து வரும் விமானம், மதுரையில் இருந்து காலை 9:30 மணிக்கு வரும் விமானம், கர்னூல் பகுதியில் இருந்து மாலை 4:20 மணிக்கு வரும் விமானம், மதுரையில் இருந்து இரவு 8:30 மணிக்கு வரும் விமானம் போன்றவைகளும் ரத்து செய்யப் பட்டுள்ளது. மேலும் அந்தமான், சார்ஜா, துபாய், தோகா, பாரிஸ், இலங்கை மற்றும் பிராங்க்பாட் செல்லும் விமானங்களும் ஒரு மணி நேரம் தாமதமாக கிளம்பிச் சென்றுள்ளது.