Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

1 மணி நேரத்தில் கடையடைப்பு…… மாவட்டநிர்வாகத்தால் நாங்க திட்டு வாங்குறோம்….. வியாபாரிகள் கொந்தளிப்பு….!!

கோவையில் மாவட்ட நிர்வாகம் அரசின் அறிக்கைகளை கவனிப்பதில்லை என வியாபாரிகள் குற்றம்சாட்டுகின்றனர்.

தமிழகத்தில் மே 4ம்தேதி முதல் ஊரடங்கில் சில தளர்வுகள் செய்யப்பட்டு சில மாற்றத்தை அரசு கொண்டு வந்தது. முடி வெட்டும் கடை, அழகு நிலையங்கள் உள்ளிட்டவற்றை தவிர அனைத்து தனிகடைகளும் சமூக இடைவெளியை கடைபிடித்து திறக்கப்படும் என தமிழக அரசு உத்தரவிட்டிருந்தது. அதன்படி, வியாபாரிகள் தமிழகம் முழுவதும் நேற்று காலை 10 மணி முதல் இரவு 9 மணி வரை கடைகளை திறக்க அனுமதிக்கப்பட்டிருந்ததன் காரணமாக கடைகளை திறந்து வைத்தனர். அந்த வகையில், கோயம்புத்தூர் மாவட்டத்தில் முக்கிய பஜார் பகுதிகளில் செருப்பு கடை, ஹார்டுவேர், சிமெண்ட், எலெக்ட்ரிக்கல் பொருட்கள், துணிக்கடைகள் ,மொபைல் கம்ப்யூட்டர் கடைகள் உள்ளிட்ட அனைத்தும் காலை 10 மணி அளவில் திறக்கப்பட்டு குறைந்த அளவிலான ஆட்களை வைத்து முதலில் சுத்தம் செய்யப்பட்டது.

இந்நிலையில் கடை திறந்து ஒரு மணி நேரம் முடிவதற்குள் காவல்துறையினர் வந்து ஒலிபெருக்கி மூலம் கடைகளை அடைக்குமாறு வலியுறுத்தி வந்தனர். இதனால் வேதனையடைந்த வியாபாரிகள் இதுகுறித்து கூறுகையில், காவல்துறையினர் திடீரென்று கடைகளை அடைக்கச் சொன்னார்கள். காரணம் கேட்டபோது இன்று அமைச்சரவை கூட்டம் நடைபெறுகிறது. அதில்,

முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டு பின் நடைமுறைபடுத்தப்படும் தளர்வுகளை வைத்து அடுத்த கட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் அதுவரை கடைகள் மூடிவிட்டு நாளைமுதல் (புதன் கிழமை) கடைகளை திறந்து கொள்ளுங்கள் என்றும் காவல்துறையினர் தெரிவித்ததாக கூறுகின்றனர். இது ஒருபுறமிருக்க ஒரு சில இடங்களில் அரசு உத்தரவின் பேரில் தான் நாங்கள் கடைகளைத் திறந்தோம்.

ஆனால் அதை கணக்கில் கொள்ளாமல் காவல்துறையினர் மரியாதை குறைவான பேச்சுக்களைப் பேசி எங்களை அவமானப்படுத்துகின்றனர். சில இடங்களில் தாக்குதல்களை நடத்தியுள்ளனர் என்று வேதனையுடன் தெரிவித்தனர். இதையெல்லாம் பார்க்கையில் மாவட்ட நிர்வாகம் முறையாக செயல்படவில்லை என்பது தெரிகிறது.

மாவட்ட நிர்வாகத்தின் அறிவுரைப்படி தான் காவல்துறையினர் நடக்கின்றனர் என்றால் அரசின் உத்தரவு என்ன என்பது சாமானிய மக்கள் எங்களுக்கு தெரிந்து இருக்கிறது. ஏன் மாவட்ட நிர்வாகத்திற்கு தெரியவில்லை என்று சரமாரியாக குற்றம் சாட்டியுள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |