கொரோனா தடுப்பு கட்டுப்பாடுகள் குறித்து கலெக்டர் அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றுள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள கலெக்டர் அலுவலகத்தில் அமைந்திருக்கும் மக்கள் நல்லுறவு மையக் கூட்டத்தில் வைத்து ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றுள்ளது. இந்த கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆர்த்தி தலைமை வகித்துள்ளார். இதில் இம்மாவட்டத்தில் நடைபெற்றுக்கொண்டிருக்கும் கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கைகள் பற்றியும், அலுவலர்கள் மேற்கொண்டு செய்ய வேண்டிய பணிகள் பற்றியும் ஆலோசனை நடைபெற்றுள்ளது.
இதனைத் தொடர்ந்து இந்தக் கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர்கள் நாராயணன், மணிவண்ணன் மற்றும் பன்னீர்செல்வம், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் ஜெயசுதா, சுகாதாரப் பணிகள் துணை இயக்குனர் பழனி, மருத்துவ பணி இணை இயக்குனர் ஜீவா, மாவட்ட காவல்துறை சூப்பிரண்ட் டாக்டர் சுதாகர் ஆகியோர் இந்த ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்டுள்ளனர்.