கட்டிட தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள பி.எல்.எஸ் நகர் பகுதியில் திருவனந்தபுரத்தைச் சேர்ந்த சிபு என்ற கட்டிட தொழிலாளி தங்கி வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் சிபு தனது நண்பர்களுடன் இணைந்து மது அருந்தியுள்ளார். இதனை அடுத்து சிபு எனக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை என்று வருத்தத்துடன் கூறியதற்கு அனைவரும் அவரை சமாதானப்படுத்தி உள்ளனர். ஆனாலும் மன உளைச்சலில் இருந்த சிபு கட்டிடத்தின் ஒரு கம்பியில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார்.
இதனையடுத்து மறுநாள் காலை சக தொழிலாளர்கள் சிபு சடலமாக தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து உடனடியாக பீளமேடு காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் அவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.