வெடிகுண்டு தாக்குதல் நடத்த சதித் திட்டம் தீட்டிய 14 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
ஜெர்மன் மற்றும் டென்மார்க் அதிகாரிகள் வெடிகுண்டு தாக்குதல் நடத்த சதித்திட்டம் தீட்டிய 14 பேரை கைது செய்துள்ளனர். அவர்களைக் குறித்து இதுவரை எந்த தகவலும் வெளியிடாது இருந்த நிலையில் தற்போது மூன்று பேர் குறித்த சில தகவல்களை வெளியிட்டுள்ளனர். அதில், அவர்கள் 3 பேரும் உடன் பிறந்த சகோதரர்கள். 33,36 மற்றும் 40 வயதுடைய இந்த மூவரும் நாட்டுக்கு கேடு விளைவிக்கும் வகையில் வன்முறை திட்டத்தைத் தீட்டியுள்ளனர்.
இவர்கள் மூவரும் கடந்த ஜனவரி மாதம் வெடி பொருட்களாக பயன்படுத்தக் கூடிய ரசாயனங்களை வாங்கியுள்ளனர். ஆகவே இவர்களில் இருவர் டென்மார்க்கிலும், ஒருவர் ஜெர்மன் ஹெஸ்ஸி மாகாணத்திலும் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் டெசாவ் நகரில் உள்ள ஒரு வீட்டில் 10 கிலோ வெடி மருந்துகளும் சில கருவிகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என்று போலீசார் தெரிவித்தனர்.