கர்நாடக மாநிலத்தில் மிகவும் செல்வாக்கு பெற்ற பிரபலமான மடாதிபதி லிங்காயத் (64). இவர் லிங்காயத் பள்ளிகளை ஆன்மீகப் பள்ளிகளாக மாற்றினார். இவர் நடத்தும் பள்ளி பெங்களூரில் இருந்து 200 கிலோமீட்டர் தொலைவில் உள்ள சித்ரதுர்கா என்ற பகுதியிலும் அமைந்துள்ளது. முருகப் மடத்தால் நடத்தப்படும் இப்பள்ளியில் படிக்கும் மைனர் சிறுமிகளை மடாதிபதி பாலியல் பலாத்காரம் செய்ததாக குற்றச்சாட்டு எழுந்ததால் அவர் கைது செய்யப்பட்டார். கடந்த செப்டம்பர் 1-ஆம் தேதி மடாதிபதி கைது செய்யப்பட்ட நிலையில் வழக்கு விசாரணை நடத்தி வரும் காவல் கண்காணிப்பாளர் பரசுராம் மடாதிபதி மயக்க மருந்து தடவிய ஆப்பிள்களை கொடுத்து குழந்தைகளை பாலியல் பலாத்காரம் செய்தார் என்று கூறினார்.
இந்நிலையில் வழக்கு விசாரணை இன்று நீதிமன்றத்தில் வந்தது. அப்போது நீதிபதியிடம் பாதிக்கப்பட்ட சிறுமிகள் வாக்குமூலம் கொடுத்துள்ளனர். அதில் 15 வயது சிறுமி ஒருவர் கூறியதாவது, எங்களுக்கு ஏதாவது சாக்லேட் தருவார். அதன்பின் எங்களை அருகில் அமர வைத்து விட்டு மது அருந்து கொண்டே எங்களுடைய ஆடைகளை கழற்றி பலாத்காரம் செய்வார். நாங்கள் ஏழை குடும்பத்தை சேர்ந்தவர்கள் என்று செஞ்சியும் கூட எங்களை விடவில்லை என்று கூறியுள்ளார். அதோடு மயக்க மருந்து கலந்த சாக்லேட்டுகளையும் கொடுத்து நாங்கள் மயங்கிய பிறகு எங்களை பாலியல் பலாத்காரம் செய்து விடுவார் என்றும் கூறியுள்ளனர்.
மயக்கம் தெளியும்போது உடம்பெல்லாம் மிகவும் வலியாக இருக்கும் எனவும் அப்பாவி சிறுமிகள் கூறியுள்ளனர். இந்நிலையில் வார்டன் ராஸ்மி மூலம் எங்களுடைய அறைக்கை பெண்களை அனுப்பி வைத்து சில நேரங்களில் கத்தி முனையில் எங்களை பாலியல் பலாத்காரம் செய்வார் என்றும் கூறியுள்ளனர். இதேபோன்று 16 வயது சிறுமி ஒருவர் கூறுகையில், சுவாமியின் அறைக்கை சொல்ல மறுத்தால் வார்டன் ராஸ்மி எங்களை கடுமையாக அடிப்பார்.
எங்களுக்கு மயக்க மருந்து கலந்த ஆப்பிள்களை தந்து நாங்கள் மயங்கிய பிறகு எங்களுடைய ஆடைகளை எல்லாம் கழட்டி விடுவார். மயக்கம் தெளிந்து பார்த்தால் உடம்பில் ஆடைகள் இருக்காது. நாங்கள் அவருடைய ஆசைக்கு இணங்க மறுத்தால் கத்தியை காட்டி மிரட்டி எங்களை பாலியல் பலாத்காரம் செய்வார். இதேபோன்று பலமுறை என்னை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார் என்று கூறியுள்ளார். மேலும் சிறுமியின் வாக்குமூலத்தை பெற்றுக்கொண்ட மாஜிஸ்திரேட் நீதிமன்ற காவலை மடாதிபதிக்கு மேலும் நீடித்துள்ளார்