Categories
உலக செய்திகள்

கொரோனோவிடம் சிக்கி தவிக்கும் அமெரிக்கா… பலி எண்ணிக்கை 10 ஆயிரத்தையும் தாண்டியுள்ளது..!!

அமெரிக்காவில் கொரோனாவின் கோரப்பசிக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 10 ஆயிரத்தையும் தாண்டியுள்ளது.

சீனாவில் தொடங்கி உலகையே மிரட்டி வரும் கொரோனா வைரஸ் 200 நாடுகளை கதிகலங்க வைத்துள்ளது. நாளுக்கு நாள் பலி எண்ணிக்கையும், பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கையும் அதிகரித்து கொண்டே செல்கின்றது.

இந்த வைரஸ் கொடூர தாக்குதலின் வீரியம் ஒருபுறம் அதிகரித்துக்கொண்டே சென்றாலும், மறுபுறம் இதற்கு மருந்து கண்டுபிடிக்கும் பணியில் அமெரிக்க உட்பட பல்வேறு நாடுகள் முயற்சி செய்து வருகின்றன.

ஆனால் இன்னும் கண்டுபிடிக்க முடியாமல் இருப்பதால் உலக அளவில் பலி எண்ணிக்கை ராக்கெட் வேகத்தில் உயர்ந்து கொண்டே செல்கிறது. ஐரோப்பிய நாடுகளை தொடர்ந்து தற்போது அமெரிக்காவில் கோரத்தாண்டவம் ஆடி வருகிறது. அந்நாட்டில் கொரோனாவுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 10 ஆயிரத்தையும் தாண்டியுள்ளது.

தற்போதைய நிலவரப்படி, அமெரிக்காவில் 3 லட்சத்து 67 ஆயிரத்து 004 பேருக்கு வைரஸ் பரவியுள்ளது. வைரஸ் பரவியவர்களில் 3 லட்சத்து36 ஆயிரத்து 462 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும், 19 ஆயிரத்து 671 பேர் சிகிச்சைக்கு பின் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், அந்நாட்டில் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 10 ஆயிரத்து 871 ஆக அதிகரித்துள்ளது.  இதனால் இத்தாலி, ஸ்பெயினுக்கு அடுத்தப்படியாக கொரோனாவுக்கு அதிக உயிரிழப்புகளை சந்தித்த நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா மூன்றாம் இடத்தில் உள்ளது.

Categories

Tech |