Categories
தேசிய செய்திகள்

ஹிமாச்சலில் பாஜகவுக்கு டஃப் கொடுக்கும் காங்கிரஸ்….. யாருக்கு வெற்றி…..? கருத்து கணிப்பு முடிவுகள் இதோ….!!!!!

இமாச்சல் பிரதேசத்தில் நவம்பர் 12-ஆம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த மாநிலத்தில் மொத்தம் 68 தொகுதிகள் இருக்கிறது. இதில் 35 தொகுதிகளை கைப்பற்றும் கட்சி தான் ஆட்சி அமைக்க முடியும். கடந்த 2017-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் காங்கிரஸ் 21 இடங்களையும், பாஜக 44 இடங்களையும் பிடித்திருந்தது. அதன் பிறகு வாக்கு சதவீதத்தில் காங்கிரஸ் 41.7 சதவீதமும், பாஜக 48.8 சதவீதமும் பெற்றிருந்தது. இந்நிலையில் நடப்பாண்டில் 12-ம் தேதி தேர்தல் நடைபெறும் நிலையில், ஏபிபி-சி மற்றும் ரீபப்ளிக் பி-மார்க் நடத்திய கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியாகியுள்ளது.

ஏபிபி-சி கருத்துக்கணிப்பு முடிவு:

1. (காங்கிரஸ்) சீட் கணிப்பு 29 முதல் 37, வாக்கு சதவீதம் 44.2%

2. (பாஜக) சீட் கணிப்பு 31 முதல் 39, வாக்கு சதவீதம் 44.8%

3. (ஆம் ஆத்மி) சீட் கணிப்பு 0 முதல் 1, வாக்கு சதவீதம் 3.3%

4. (மற்ற கட்சிகள்) சீட் கணிப்பு 0 முதல் 3, வாக்கு சதவீதம் 7.7%

ரிபப்ளிக்-பி மார்க் கருத்து கணிப்பு:

1. (பாஜக) சீட் கணிப்பு 37 முதல் 45, வாக்கு சதவீதம் 45.2 %,

2. (காங்கிரஸ்) சீட் கணிப்பு 22 முதல் 28, வாக்கு சதவீதம் 40.1%

3. (ஆம் ஆத்மி) சீட் கணிப்பு 0 முதல் 1, வாக்கு சதவீதம் 5.1%

4. (மற்ற கட்சிகள்) சீட் கணிப்பு 1 முதல் 4, வாக்கு சதவீதம் 9.5%

இந்த கருத்துக் கணிப்புகளில் ஒரு ஆய்வின்படி பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சிக்கு சம ஓட்டு கிடைப்பதற்கான வாய்ப்பு இருக்கிறது. ஆனால் மற்றொரு கருத்துக்கணிப்பு ஆய்வின்படி பாஜக மீண்டும் வெற்றி பெறுவதற்கான வாய்ப்பு இருக்கிறது. அதன்பின் ஆம் ஆத்மி கட்சிக்கு பெரிய அளவில் வாய்ப்பு இல்லை என்பது தெரிய வருகிறது. மேலும் இமாச்சல் பிரதேச தேர்தலில் காங்கிரஸ் மற்றும் பாஜக பிரச்சாரத்தில் தீவிரம் காட்டி வரும் நிலையில், பாஜகவுக்கு காங்கிரஸ் சமமான அளவு டஃப் கொடுப்பதால் டிசம்பர் 8-ம் தேதி வாக்கு எண்ணிக்கையின் போது தான் முடிவுகள் தெரியவரும்.

Categories

Tech |