Categories
தேசிய செய்திகள்

“கேஜிஎஃப் பாடலை பயன்படுத்திய காங்கிரஸ்”…. ராகுல் காந்தி மீது காப்புரிமை வழக்குப்பதிவு….. அதிர்ச்சி தகவல்….!!!!

காங்கிரஸ் கட்சியின் எம்பி ராகுல் காந்தி பாரத் ஜோடா என்ற பெயரில் இந்திய ஒற்றுமை நடைபயணத்தை கன்னியாகுமரியில் இருந்து மேற்கொண்டுள்ளார். இவர் தமிழகம், கேரளா, கர்நாடக மற்றும் ஆந்திரா ஆகிய 4 மாநிலங்களில் தன்னுடைய பாதயாத்திரையை நிறைவு செய்த நிலையில், தற்போது தெலுங்கானா மாநிலத்தில் பாதயாத்திரையை மேற்கொண்டுள்ளார். அதன் பிறகு ராகுல் காந்தியின் நடை பயணத்தின் போது நடக்கும் பல்வேறு விதமான சுவாரசிய சம்பவங்களை காங்கிரஸ் கட்சியினர் வலைதளத்தில் பதிவேற்றம் செய்து வருகின்றனர். அந்த வகையில் ஒரு வீடியோவில் கேஜிஎஃப் படத்தில் இடம்பெற்ற ஒரு பாடலை பயன்படுத்தியுள்ளனர்.

இதனால் பெங்களூருவை சேர்ந்த எம்ஆர்டி மியூசிக் நிறுவனம் ராகுல் காந்தி உட்பட 3 பேரின் மீது காப்புரிமை விதிமீறல் புகார் கொடுத்துள்ளது. அந்த புகாரில் தாங்கள் அதிக தொகை கொடுத்து வாங்கிய கேஜிஎப் படத்தின் பாடலை எங்களின் அனுமதி பெறாமல் வலைதளத்தில் பதிவேற்றம் செய்துள்ளதால் அவர்களின் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது. இந்நிலையில் அந்த புகாரின் படி 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் மியூசிக் நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும் பாரத் ஜோடா நடைபயணம் நடந்து கொண்டிருக்கும் சமயத்தில் ராகுல் காந்தி உட்பட 3 பேர் மீது விதிமுறை வழக்கு தொடரப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |