காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் திவ்யா ஸ்பந்தனா ட்விட்டர் பக்கத்தில் இருந்து வெளியேறியுள்ளார்.
காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் திவ்யா ஸ்பந்தனா ட்விட்டரில் சுறுசுறுப்பாக இயங்கி கொண்டு வருபவர். இவர் அவ்வப்போது பாஜக பற்றி ட்விட்டரில் கருத்து பதிவிட்டு பரபரப்பை ஏற்படத்தக்கூடியவர். சமீபத்தில் கூட பிரதமர் மோடியையும், ஹிட்லரையும் ஒப்பிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார். இந்நிலையில் இவர் தனது ட்விட்டர் பக்கத்தில் இருந்து வெளியேறியுள்ளார். நிதியமைச்சராக பொறுப்பேற்றுள்ள நிர்மலா சீதாராமனுக்கு திவ்யா ஸ்பந்தனா தனது ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார்.
இந்த வாழ்த்து செய்தி காங்கிரஸ் கட்சிகளுக்கிடையே சலசலப்பை ஏற்படுத்தியதாகவும், அதன் காரணமாக அவர் ட்விட்டரில் இருந்து விலகியதாகவும் கூறப்படுகிறது. ஆனால் இதற்கு திவ்யா ஸ்பந்தனா தரப்பில் இருந்து எந்த விளக்கமும் அளிக்கவில்லை. காங்கிரஸ் கட்சியின் தேசிய அளவிலான செய்தி தொடர்பாளர்கள் ஒருமாதம் எந்த டி.வி சேனல்களிலும் பங்கேற்க கூடாது என அக்கட்சி தடை விதித்திருந்த நிலையில் திவ்யா ஸ்பந்தனாவின் ட்விட்டர் கணக்கு நீக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.