Categories
அரசியல்

நல்லவன் வேஷம் கலைந்தது… காங்கிரஸ் ஊழலின் ஊற்றுக்கண்…. H.ராஜா கருத்து…!!

நல்லவர் போல் நடித்த பா.சிதம்பரம் கைது செய்யப்பட்டதன் மூலம் காங்கிரஸ் ஊழல் ஊற்றுக்கண்ணாக திகழ்கிறது என்பது தெரியவந்துள்ளதாக பாஜக தேசிய செயலாளர் ஹெச் ராஜா கூறியுள்ளார்.

சிவகங்கையில் பாஜக பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய  ஹெட்ச்.ராஜா இன்னும் சில நாட்களில் முக்கியமான எதிர்க்கட்சித் தலைவர் கைதாவார் என்றும் அவர் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவராக இருக்கலாம் என்றும் தெரிவித்தார். முதலில் பொதுத்தேர்வு என்றால் மாணவர்களுக்கு அல்ல வாத்தியாருக்கு தேர்வு அவர்கள் சரியான முறையில் கல்வி கற்பிக்கிறார்களா என்பதை ஆராய்வதற்காக தான் புதிய கல்வி கொள்கை இதற்கான முயற்சி வரவேற்க வேண்டும்.

Image result for h raja

மாணவர்கள் மேல் அக்கறை உள்ளவர்கள் யாராக இருந்தாலும் வரவேற்பார்கள். ஆனால் தமிழ்நாட்டில் எதிர் சிந்தனை கொண்ட அரசியல் கட்சியாக இருப்பதால் இதற்கு கூட எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள் என்று குற்றம் சாட்டியதோடு, நல்லவர் போல் நடித்த பா.சிதம்பரம் கைது செய்யப்பட்டதன் மூலம் காங்கிரஸ் ஊழல் ஊற்றுக்கண்ணாக திகழ்கிறது என்பது தெரியவந்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |