மக்களவை தேர்தலில் காங்கிரஸ் கட்சி விருப்ப மனு விநியோகம் வருகின்ற 15 மற்றும் 16_ஆம் தேதி வழங்கப்படுமென்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மக்களவை தேர்தலில் தமிழகத்தில் திமுக தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸ் கட்சி இடம்பெற்றுள்ளது . அக்கட்சிக்கு 10 நாடாளுமன்ற தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது . எந்தெந்த தொகுதிகள் என்று இன்று இறுதி செய்யப்படயுள்ள நிலையில் , மக்களவை தேர்தலுக்கு காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்தலில் போட்டியிட விரும்புவோருக்கான விருப்பமனு வழங்கப்படுவது குறித்து அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது .
தமிழ்நாடு மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் கே.எஸ் அழகிரி வெளியிட்டுள்ள அறிக்கையில், மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட விரும்புவோர் மார்ச் 15 மற்றும் 16ம் தேதிகளில் விருப்ப மனுக்களை பெற்று கொள்ளலாம் . விருப்ப மனு கட்டணமாக 25 ஆயிரம் ரூபாயும் , தனித் தொகுதி மற்றும் பெண்களுக்கு 10,000 ரூபாயும் செலுத்தி விருப்ப மனுக்களை பெற்று கொள்ளலாம் என குறிப்பிடப்பட்டு இருந்தது .