காங்கிரஸ் எம்பி ஜோதிமணி தனது டுவிட்டர் பக்கத்தில் பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்களை விமர்சித்து கருத்து ஒன்றை பதிவிட்டுள்ளார்.
கொரனோ பாதிப்பைத் கட்டுப்படுத்துவதற்காக மத்திய மாநில அரசுகளும், சுகாதாரத்துறை அதிகாரிகளும் பல்வேறு நடவடிக்கைகளைத் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர். இருப்பினும் அதனுடைய பாதிப்பு ஆங்காங்கே அதிகரித்த வண்ணம் உள்ளன. இதன் பாதிப்பைக் கட்டுப்படுத்த ஊரடங்கு தான் ஒரே வழி என்பதால், பல மாநிலங்களில் இன்றளவும் ஊரடங்கு கடுமையாகவும் தளர்வுகளுடனும் பின்பற்றப்பட்டு வருகிறது.
ஊரடங்கினால் பல குடும்பங்களின் பொருளாதார சூழ்நிலை சரிந்து வாழ்வாதாரம் இன்றி தவித்து வருகின்றனர். இது குறித்து பல சமூக ஆர்வலர்கள் தொடர்ந்து பல்வேறு கருத்துக்களை தங்களது சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர். அந்த வரிசையில், காங்கிரஸ் எம்பி ஜோதிமணி தனது ட்விட்டர் பக்கத்தில் இந்தியாவில்
கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 35 லட்சத்தை தாண்டிவிட்டது. மக்கள் தினமும் செத்து மடிகிறார்கள். நாட்டின் பொருளாதாரம் கொரோனா பாதிப்பிற்கு முன்பே செத்துவிட்டது. வேலை இல்லை. மக்கள் வறுமையின் கோரப்பிடியில் சிக்கி இருக்கிறார்கள். இந்த கொடுமையான நேரத்தில், நாய் வளர்ப்பு பற்றி பேசுகிறார் பிரதமர். என்ன கொடுமை என டுவிட்டரில் பிரதமரை விமர்சித்துள்ளார்.