Categories
தேசிய செய்திகள்

ரிப்பேரான ஹெலிகாப்டரை சரி செய்ய உதவிய ராகுல்.!!

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, கோளாறு ஏற்பட்ட  ஹெலிகாப்டரை பாதுகாப்பு குழுவுடன் இணைந்து சரிசெய்ய உதவிய காட்சிகள் வெளியாகி உள்ளன.

நடை பெற்று வரும்  மக்களவை தேர்தலுக்கான 6ம் கட்ட தேர்தல் நாளை (12ம் தேதி) ஞாயிற்று கிழமை நடைபெற இருக்கிறது.  இமாச்சலப் பிரதேச மாநிலத்தில் 3 மக்களவை தொகுதிகளுக்கு வாக்கு பதிவு நடைபெற உள்ளது. இந்நிலையில் தேர்தல் பரப்புரை மேற்கொள்வதற்காக ராகுல் காந்தி இமாச்சலப் பிரதேசத்தின் உனா நகருக்குச் சென்றபோது, ஹெலிகாப்டரில் சிறிய அளவில் கோளாறு  ஏற்பட்டது. இதை சரிசெய்வதற்கான பணியில் பாதுகாப்பு குழுவினர் ஈடுபட்டனர். அப்போது ராகுல் காந்தியும் அவர்களுடன் இணைந்து சரி செய்ய  உதவினார்.

https://www.instagram.com/p/BxSUJokgoQl/?utm_source=ig_web_button_share_sheet

இந்நிலையில் இதுகுறித்து ராகுல் காந்தி சமூக வலைதளத்தில் “அனைவரும் இணைந்து கூட்டாக  முயற்சி செய்ததால் விரைவாகவே பழுது சரி செய்யப்பட்டுவிட்டதாகவும், பெரிய அளவில் பயப்படும் அளவுக்கு சிக்கல் எதுவும் நேரவில்லை என்றும் தெரிவித்துள்ளார். ராகுல் காந்தி உதவி செய்த காட்சிகள்  சமூக வலை தளங்களில் வைரலாகி வருகிறது.

 

Categories

Tech |