அஜித் படத்திற்கு கிடைத்த விருதிற்கு விஜய் வாழ்த்தியுள்ளார் என்று டி.இமான் நெகிழ்ச்சியுடன் ட்விட் செய்துள்ளார்.
கடந்த திங்கட்கிழமை அன்று 2019 ஆம் ஆண்டிற்கான 67 வது தேசிய திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டது. இதில் தமிழ் சினிமாவிற்கு 7 விருதுகள் கிடைத்துள்ளது. அதில் அஜித்தின் விஸ்வாசம் படத்தின் இசையமைப்பாளர் டி.இமானுக்கு சிறந்த தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் திரை பிரபலங்களும், ரசிகர்களும் இமானுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இது குறித்து இமான் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது, தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரங்களான ரஜினிகாந்த், அஜீத், விஜய் ஆகியோர் எனக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
விஜயின் தமிழன் படம் மூலமாக தான் என்னுடைய இசை பயணம் தொடங்கியது. தற்போது அஜித் படமான விஸ்வாசத்திற்கு தேசிய விருது கிடைத்ததற்கு விஜய் வாழ்த்து தெரிவித்திருப்பது நெகழ்ச்சியாக இருக்கிறது என்று பதிவிட்டுள்ளார்.
Glad to witness and come across amazing humans more than stars! pic.twitter.com/ZNagCkCQEO
— D.IMMAN (@immancomposer) March 23, 2021