பிரபல தெலுங்கு இயக்குனர் ராஜமவுலி இயக்கத்தில் வெளியான ஆர்ஆர்ஆர் திரைப்படம் உலக அளவில் 1000 கோடி வசூலை கடந்து சூப்பர் ஹிட் ஆனது. இந்த படத்தில் ராம்சரண் மற்றும் ஜூனியர் என்டிஆர் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார்கள். இந்த படம் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியான பிறகு ஹாலிவுட் பிரபலங்களும் கூட ராஜமவுலியை பாராட்டி தள்ளினர். அதன் பிறகு இயக்குனர் ராஜமவுலி தன்னுடைய சொந்த முயற்சியில் ஆர்ஆர்ஆர் திரைப்படத்தை ஆஸ்கர் விருதுக்கு அனுப்பி வைத்திருக்கிறார்.
இந்நிலையில் கோல்டன் கிளாப் விருதுகளில் ஆர்ஆர்ஆர் திரைப்படம் 2 பிரிவுகளில் தேர்வாகி இருக்கிறது. அதன்படி சிறந்த Non இங்கிலீஷ் படம் மற்றும் நாட்டுக்குத்து பாடல் சிறந்த ஒரிஜினல் பாடல் போன்ற 2 பிரிவுகளில் தேர்வாகி இருக்கிறது. மேலும் இதனால் இயக்குனர் ராஜமவுலிக்கு ரசிகர்கள் மற்றும் திரையுலக பிரபலங்கள் பலர் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.