Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

அறுவடை பணிக்கு இயந்திரம்…. இந்த வழியில் செல்ல கூடாது…. ஏற்பட்ட தகராறு… இறுதியில் அரிவாள் வெட்டு…

இயந்திரத்தை மாற்று வழியில் கொண்டு செல்லகூற போய் அரிவாள் வெட்டில் போய் முடிந்தது அப்பகுதி மக்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தஞ்சாவூர் மாவட்டம் செங்கிப்பட்டி யை சேர்ந்தவர் திவாகர். இவரது தாய் சுமதி. நேற்று முன்தினம் வயலில் அறுவடை பணி காக அறுவடை இயந்திரத்தை வாடிப்பட்டி தெருவின் வழியாக எடுத்துச் சென்றுள்ளார். அப்போது அந்த தெருவை சேர்ந்த சக்திவேல் என்பவர் அறுவடை செய்யும் இயந்திரத்தை இவ்வழியாக கொண்டு செல்லக்கூடாது என தடுத்து நிறுத்தியுள்ளார். இதனால் திவாகர்க்கும் சக்திவேல்க்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டு சண்டையாக மாறி உள்ளது.

இதனால் கோபம் கொண்ட சக்திவேல் அரிவாளால் திவாகரின்  தாயாரையும் திவாகரையும் வெட்டியுள்ளார்.இதனை தொடர்ந்து படுகாயம் அடைந்த இருவரையும் அக்கம்பக்கத்தினர் மீட்டு தஞ்சையில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரியில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். இச்சம்பவம் குறித்து திவாகரின் தாய் சுமதி அளித்த புகாரின் அடிப்படையில் செங்கிப்பட்டி காவல்துறையினர் சக்திவேல் மீது வழக்குப் பதிந்து அவரைக் கைது செய்துள்ளனர்.

Categories

Tech |