Categories
தேசிய செய்திகள்

மணிப்பூரில் நம்பிக்கை வாக்கெடுப்பு… பா.ஜ.க வெற்றி… காங்கிரஸ் எம்எல்ஏக்கள் ராஜினாமா…!!

மணிப்பூர் சட்டசபையில் நேற்று நடைபெற்ற நம்பிக்கை  வாக்கெடுப்பின்படி பா.ஜனதா கட்சி வெற்றி பெற்றுள்ள நிலையில் காங்கிரஸ் கட்சி எம்எல்ஏக்கள் தங்களது பதவியை ராஜினாமா செய்துள்ளனர்.

மணிப்பூர் சட்டசபையில் நேற்று நம்பிக்கை வாக்கெடுப்பு எடுக்கப்பட்டது. இந்த வாக்கெடுப்பின்படி என். பிரேன் சிங் ஆட்சி வெற்றி பெற்றது. வாக்கு எடுக்கப்படும் போது காங்கிரஸ் சட்டசபை உறுப்பினர்களுக்கு எதிர்த்து வாக்களிக்க வேண்டும் என்று அக்கட்சியின் கொறடா உத்தரவிட்டிருந்தார். ஆனால், 8 எம்.எல்..-க்கள் அவரது உத்தரவை மீறி சட்டசபை கூட்டத்தை புறக்கணித்து விட்டனர். இந்த நிலையில் இன்று 6 எம்.எல்.ஏ.-க்கள் தங்களது ராஜினாமா கடிதத்தை சபாநாயகருக்கு அனுப்பியுள்ளனர். ஆனால் இதுவரை ராஜினாமா ஏற்கப்படவில்லை. தனிக்கட்சியாக செயல்பட நிறைய பேர் இருந்தும் ஆட்சியமைப்பு  தோல்வியில் முடிந்ததால் மாநில காங்கிரஸ் தலைவர் இபோபி சிங் மீது எம்பிக்கள் குற்றம்சாட்டினர்.

இதற்கு முன் மணிப்பூர் மாநிலத்தில் 2017-ம் ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தலில் மொத்தம் இருக்கும் 60 இடங்களில் பா.ஜ.க.வுக்கு 21 இடங்கள் கிடைத்தது. தணிகட்சிகள் மற்றும் பிற கட்சிகளின் எம்எல்ஏ-க்கள் ஆதரவோடு பா.ஜ.க. ஆட்சி அமைத்தது. முதல் மந்திரியாக பிரேன் சிங் இருக்கிறார். இந்த நிலையில், ஆளும் பா.ஜ.க.வை சேர்ந்த 3 எம்.எல்.ஏ.க்கள் காங்கிரசில் சேர்ந்துள்ளனர். தேசிய மக்கள் கட்சியைச் சேர்ந்த 4 எம்.எல்.ஏ.க்கள், ஒரு சுயேச்சை எம்.எல்.ஏ., திரிணாமுல் காங்கிரஸ் எம்.எல்.ஏ, போன்றோர் அரசுக்கு கொடுத்து வந்த ஆதரவை வாபஸ் பெற்றனர்.

ஆனால் தேசிய மக்கள் கட்சி எம்.எல்.ஏ.க்கள் டெல்லி சென்று உள்துறை மந்திரி அமித் ஷாவை சந்தித்துப் பேசினர். அதன் பிறகு, தங்கள் முடிவை திரும்பப் பெறுவதாகவும் அரசுக்கு மறுபடியும் ஆதரவு அளிப்பதாகவும் அவர்கள் கூறினர். எனினும், பா.ஜ.க. அரசுக்கு போதிய பெரும்பான்மை இல்லை  எனக்கூறி வந்த காங்கிரஸ், பா.ஜ.க. அரசுக்கு எதிராக காங்கிரஸ் நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை  கொண்டு வந்துள்ளது. இதனால் அந்த மாநில சட்டசபையில் நம்பிக்கை இல்லாத தீர்மானம் கொண்டு வரப்பட்டுள்ளது. குரல் வாக்கெடுப்பு மூலம் நடைபெற்ற நம்பிக்கையில்லா வாக்கெடுப்பில் பிரென் சிங் அவரது  பெரும்பான்மையை நிரூபித்துள்ளார். இதனால் மணிப்பூரில் நிலவி வந்த அரசியல் பரபரப்புக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |