‘மாநாடு’ படத்தை ப்ரீ ரிலீஸ் செய்ய இருப்பதாக தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருக்கிறார்.
தமிழ் சினிமாவில் நடிகர் சிம்பு முன்னணி நடிகராக வலம் வருகிறார். இவர் இயக்குனர் வெங்கட்பிரபு இயக்கத்தில் நடித்திருக்கும் படம் ”மாநாடு”. இந்த படத்தில் கல்யாணி பிரியதர்ஷன், எஸ்.ஜே.சூர்யா, சந்திரசேகரன் மற்றும் பலர் நடித்திருக்கின்றனர். சுரேஷ் காமாட்சி தயாரிக்கும் இந்த படத்திற்கு யுவன்ஷங்கர் ராஜா இசையமைத்திருக்கிறார்.
சமீபத்தில், இந்த படத்தின் டிரைலர் மற்றும் பாடல்கள் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படம் ரிலீஸ் ஆவதற்கு முன்பே வருகிற 18-ஆம் தேதி இந்த படத்தை ப்ரீ ரிலீஸ் செய்ய இருப்பதாக இந்த படத்தின் தயாரிப்பாளர் ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருக்கிறார்.