‘மாநாடு’ திரைப்படத்தின் முதல் நாள் வசூல் 10 கோடி வரை இருக்கும் என கூறப்படுகிறது.
தமிழ் சினிமாவில் நடிகர் சிம்பு முன்னணி நடிகராக வலம் வருபவர். வெங்கட்பிரபு இயக்கத்தில் இவர் நடிப்பில் உருவாகி இருக்கும் திரைப்படம் ”மாநாடு”. இந்த படத்தில் கல்யாணி பிரியதர்ஷன், எஸ்.ஜே.சூர்யா, எஸ்.ஏ.சந்திரசேகர் மற்றும் பலர் நடித்திருக்கின்றனர். சுரேஷ் காமாட்சி தயாரித்த இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.
இதனையடுத்து, இந்த படம் வரும் 25-ஆம் தேதி தமிழ் மற்றும் தெலுங்கில் வெளியாக இருக்கும் நிலையில், இந்த படத்தின் முன்பதிவு ஒரு வாரத்திற்கு முன்னதாகவே தொடங்கிவிட்டது.
இந்நிலையில், இந்த முன்பதிவு தொடங்கிய அனைத்து தியேட்டர்களிலும் காலைக் காட்சி ஹவுஸ்புல் ஆகி விட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், இந்த திரைப்படத்தின் முதல் நாள் வசூல் 10 கோடி வரை இருக்கும் எனவும் கூறப்படுகிறது.