சின்னத்திரை படப்பிடிப்புகளுக்கு நிபந்தனையுடன் அனுமதி வழங்கி தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
கடந்த 4ஆம் தேதி சின்ன துறையினர் அமைச்சர் கடம்பூர் ராஜீயை சந்தித்தனர். அதற்குப் பின்னர் 2 நாட்களுக்கு முன்பு பெப்சி தலைவர் ஆர்கே செல்வமணியும் அமைச்சர் கடம்பூர் ராஜீயை சந்தித்து, சின்னத்திரை படப்பிடிப்பு தொடங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். அடிப்படையில் தற்போது தமிழக முதல்வர் அனுமதி வழங்கி உத்தரவிட்டுள்ளார். அதில், முக்கியமாக சொல்லப்பட்டிருப்பது என்னவென்றால் உள்ள அல்லது அரங்கிற்குள் மட்டும் படப்பிடிப்பு நடத்த அனுமதி வழங்கியுள்ளார்கள். இதே பாதிக்கப்பட்ட பகுதிக்கு பொருந்தாது, பொது இடத்தில் படப்பிடிப்பு நடத்தக்கூடாது. ஊரகப் பகுதிகளில் படப்பிடிப்பை நடத்தலாம் என்று சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.
படப்பிடிப்பு நடத்தப்படும் அரங்கு அல்லது வீட்டின் முன்னும் பின்னும் கண்டிப்பாக கிருமிநாசினி கொண்டு முழுவதுமாக சுத்தம் செய்ய வேண்டும். படப்பிடிப்பு தொடங்கி முன்பும், பின்பும் இரண்ண்டு முறை கிருமிநாசினி தெளிக்க வேண்டும். படப்பிடிப்பில் கலந்துகொள்ளும் நடிகர்கள் நடிகைகள் தவிர மற்ற தொழில்நுட்ப கலைஞர்கள் அனைவரும் கண்டிப்பாக முக கவசம் அணிய வேண்டும். அதேபோல படப்பிடிப்பின்போது சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும். நடிகர், நடிகைகள் படப்பிடிப்பின் இடைவெளியில் போது தவறாமல் முக கவசம் அணிய வேண்டும்.
பார்வையாளர்களை அனுமதிக்க கூடாது. படக்குழுவினர் அனைவரும் அவரின் கையை சுத்தப்படுத்த வேண்டும். சளி, இருமல், காய்ச்சல், மூச்சுத்திணறல் உள்ள கலைஞர்கள் தொழில்நுட்ப பணியாளர்கள் யாரும் படப்பிடிப்புக்கு அனுமதிக்கக் கூடாது. அதிகபட்சமாக நடிகர், நடிகைகள், தொழில் நுட்ப பணியாளர்கள் உட்பட 20 பேர் மிகாமல் படப்பிடிப்பு நடத்தலாம். சென்னையில் நடத்துவதற்கு மாநகராட்சி ஆணையரிடம், பிற மாவட்டங்களுக்கு அந்தந்த மாவட்ட ஆட்சியரிடம் அனுமதி பெற வேண்டும். என்று மத்திய மாநில அரசுகள் அவ்வப்போது விதிக்கும் அனைத்து கட்டுப்பாடுகளையும் தவறாமல் படப்பிடிப்பின் போது பின்பற்ற வேண்டும் என்று தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.