காதல் ஜோடிகள் திருமணம் செய்து வீட்டிற்கு வந்து விஷம் அருந்தி தற்கொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் கண்ணிமேய்க்கான் பட்டியில் வசிப்பவர் முருகன். அவருடைய மகன் அஜித்(18). இவர் பன்னிரண்டாம் வகுப்பு முடித்துவிட்டு கூலி வேலை செய்து வந்துள்ளார். இந்நிலையில் அந்த பகுதியை சேர்ந்த ஜெயராமன் என்பவரின் மகன் சிவரஞ்சனி(19) என்பவரை காதலித்து வந்துள்ளார். இவர்களின் காதல் விவகாரம் இரு வீட்டாருக்கும் தெரியவந்துள்ளது. ஆனால் சிவரஞ்சனிகு அஜித்தை விட வயது அதிகம் என்பதால் என்பதால் சிவரஞ்சனியின் பெற்றோர் வேறு இடத்தில் மாப்பிள்ளை பார்த்து வந்துள்ளனர்.
இந்நிலையில் வீட்டை விட்டு வெளியேறிய அந்த ஜோடி ஒரு கோவிலில் வைத்து திருமணத்தை முடித்து விட்டு தன்னுடைய குடும்பத்தினர் வீட்டுக்கு வந்து தங்களை பிரித்து விடுவார்கள் என்று பயந்து விஷத்தை அருந்திய பின்பு பெற்றோருக்கு போன் செய்து தகவல் அளித்துள்ளனர். இதையடுத்து அஜித் உயிரிழந்துள்ளார்.உயிருக்கு போராடும் சிவரஞ்சனி தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.