கம்ப்யூட்டர் வைரஸ் தடுப்பு முன்னோடி ஜான் மெக்காபி தற்கொலை செய்து கொண்டார் .
அமெரிக்க நாட்டை சேர்ந்த ஜான் மெக்காபி கம்ப்யூட்டர் வைரஸ் தடுப்பு நிறுவனம் ஒன்றை நடத்தி வந்துள்ளார் .இவருடைய நிறுவனம் தான் முதன்முதலாக கம்ப்யூட்டர் வைரஸ் தடுப்பு மென்பொருளை வெளியிட்டது. ஆனால் வருமானத்திற்கு முறையான வருமான வரி செலுத்தாததால் இவர் மீது புகார்கள் வைக்கப்பட்டது. இதில் குறிப்பாக 2014 – 2018ஆம் ஆண்டு காலகட்டத்தில் அமெரிக்க அரசாங்கத்திற்கு சுமார் 42 லட்சத்து 14 ஆயிரத்து 105 டாலர்கள் அதாவது இந்திய மதிப்பில் ரூபாய் 31 கோடி வருமான வரி செலுத்தாமல் ஏமாற்றியதால் அந்நாட்டு அரசு இவர் மீது வழக்கு தொடுத்தது.
அதோடு ஜான் மெக்காபி தனது வருமானத்தை பினாமிகளின் வங்கிக் கணக்கிலும், பல கோடி மதிப்பிலான சொத்துகளை குவித்ததாகவும் இவர் மீது அமெரிக்க அரசு குற்றம்சாட்டியது. இந்நிலையில் இவர் கடந்த ஆண்டு ஸ்பெயினுக்கு தப்பிச் சென்ற போது பார்சிலோனா விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டு அந்நாட்டில் உள்ள சிறையில் அடைக்கப்பட்டார். அவர் மீது நிலுவை வழக்குகள் குறித்து விசாரணை நடத்துவதற்காக நேற்று ஸ்பெயின் தேசிய நீதிமன்றம் அமெரிக்காவுக்கு நாடு கடத்துவதற்கு அனுமதி வழங்கியது. ஆனால் இவர் சிறையில் உள்ள தனது அறையில் தற்கொலை செய்து கொண்டார் . இதனை கேட்டலாக் பிராந்திய அரசு அதிகாரிகள் உறுதி செய்தனர்.