Categories
உலக செய்திகள்

“அப்பாடா! ஒரு வழியா நீக்கிட்டாங்கப்பா”…. ஸ்பெயின் மக்களுக்கு குஷியான அறிவிப்பு…!!!

ஸ்பெயினில் மக்கள் கட்டாயமாக முக கவசம் அணிய வேண்டும் என்ற உத்தரவு ரத்து செய்யப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஸ்பெயின் நாட்டில் கொரோனா பாதிப்பு ருத்ர தாண்டவம் ஆடியது. ஆனால் தற்போது குறைந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது கடந்த மாதத்தில் இரண்டு வாரங்களில் ஒரு லட்சம் மக்களுக்கு 3400 க்கும் மேற்பட்டோருக்கு கொரோனோ பாதிப்பு ஏற்பட்டது. தற்போது இந்த எண்ணிக்கை 3400-லிருந்து 2299 ஆக குறைந்திருக்கிறது.

மேலும், மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருப்போரின் எண்ணிக்கையும் 20 சதவீதம் குறைந்திருக்கிறது. எனவே, மக்கள் கட்டாயமாக கவசம் அணிய வேண்டும் என்ற கட்டுப்பாடு அடுத்த வாரத்திலிருந்து ரத்து செய்யப்படும் என்று அந்நாட்டின் சுகாதாரத்துறை மந்திரியான கரோலினா டேரியாஸ் கூறியிருக்கிறார்.

Categories

Tech |