Categories
சேலம் மாவட்ட செய்திகள்

எல்லாத்தையும் ஏத்தியாச்சு… மொத்தம் 1,240 டன் உரம்.. சரக்கு ரயிலில் கொண்டுவரப்பட்டது..!!

சேலம் மாவட்டத்தில் சத்திரம் ரயில் நிலையத்திற்கு சரக்கு ரயில் மூலமாக 1,240 டன் உரம் கொண்டுவரப்பட்டுள்ளது.

சேலம் மாவட்டத்திலுள்ள செவ்வாய்பேட்டை பகுதியில் சத்திரம் ரயில் நிலையம் அமைந்துள்ளது. அந்த ரயில் நிலையத்திற்கு வடமாநிலங்களிலிருந்து உரம், சிமென்ட் மற்றும் உணவு தானிய பொருட்கள் உள்ளிட்ட பொருட்கள் சரக்கு ரயில் மூலமாக கொண்டுவரப்படும்.

இந்நிலையில் சத்திரம் ரயில் நிலையத்திற்கு ஆந்திராவிலிருந்து சரக்கு ரயில் மூலமாக 1,240 டன் உரம் கொண்டு வரப்பட்டுள்ளது. இதனையடுத்து அந்த உர மூட்டைகளை தொழிலாளர்கள் லாரிகளில் ஏற்றி மாவட்டத்திலுள்ள குடோன்களுக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

Categories

Tech |