முன்னணி காமெடி நடிகர் யோகி பாபு மீது முடிதிருத்தும் தொழிலாளர் நலச் சங்கத்தினர் புகார் அளித்துள்ளனர்.
தமிழ் சினிமாவில் முன்னணி காமெடி நடிகராக வலம் வருபவர் யோகிபாபு. இவர் நடிப்பில் உருவான மண்டேலா திரைப்படம் கடந்த ஏப்ரல் 4ஆம் தேதி தொலைக்காட்சியில் நேரடியாக ஒளிபரப்பப்பட்டது. இந்நிலையில் இப்படம் குறித்து, முடிதிருத்தும் தொழிலாளர் நல சங்கத்தினர் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளனர்.
அந்த புகார் மனுவில், நடிகர் யோகி பாபுவின் மண்டேலா திரைப்படம் சில நாட்களுக்கு முன்பு வெளியானது. அந்த படத்தில் முடிதிருத்தும் தொழிலாளர்களை புண்படுத்தும் வகையில் காட்சிகள் இருக்கிறது. மேலும் முடிதிருத்தும் மற்றும் மருத்துவ சமுதாயத்தை சேர்ந்த 40 லட்சம் மக்களை இழிவு படுத்தியுள்ளனர்.
ஆகையால் இப்படத்தின் இயக்குனர் தயாரிப்பாளர் மற்றும் யோகிபாபு ஆகியோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம் என்று அப்புகாரில் குறிப்பிடப்பிட்டுள்ளனர்.