கேரளாவில் ஆளும் இடதுசாரி ஒரு மக்களவை தொகுதியில் முன்னிலை வகித்து வருவதாக முடிவுகள் தெரிவிக்கின்றன.
நாடு முழுவதும் மக்களவை தேர்தல் கடந்த ஏப்ரல் 11_ஆம் தேதி முதல் மே 19_ஆம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெற்றது. காங்கிரஸ் கட்சி ஆட்சியை பிடிக்க வேண்டும் என்றும் , பாஜக மீண்டும் ஆட்சியை தக்க வைத்துக்கொள்ளும் வகையில் தேர்தலை சந்தித்தது. அந்த வகையில் 20 மக்களவை தொகுதிகளை கொண்ட கேரளாவில் ஆளும் இடதுசாரி அரசும் , காங்கிரஸ் மற்றும் பிஜேபி தேர்தல் களத்தை சந்தித்தன.
இந்நிலையில் காலை 8 மணிக்கு தொடக்கிய வாக்கு எண்ணிக்கை முடிவில் காங்கிரஸ் தலைமையிலான இடது ஜனநாயக முன்னணி தொடர்ந்து முன்னிலை வகித்து வருகின்றது. அங்குள்ள 20 மக்களவை தொகுதியில் ஆளும் இடதுசாரி முன்னணி 1 இடத்திலும் , காங்கிரஸ் 19 மக்களவை தொகுதிகளிலும் முன்னிலை வகிக்கிறது.