Categories
விளையாட்டு

காமன்வெல்த் பளுதூக்குதல் சாம்பியன்ஷிப் :இந்திய வீராங்கனை பூனம் யாதவ் …. வெள்ளி வென்று அசத்தல் ….!!!

2021 காமன்வெல்த் பளுதூக்குதல் போட்டியில் மகளிர் பிரிவில் இந்திய வீராங்கனை பூனம் யாதவ் வெள்ளி பதக்கம் வென்றுள்ளார்.

2021 காமன்வெல்த் பளுதூக்குதல் சாம்பியன்ஷிப் போட்டி உஸ்பெகிஸ்தான் நாட்டில் தாஷ்கன்ட் நகரில் நடைபெற்று வருகிறது .இதில் மகளிருக்கான 76  கிலோ எடைப் பிரிவில் இந்திய வீராங்கனை பூனம் யாதவ்  கலந்து கொண்டு  மொத்தம் 220 கிலோ (98+122)எடை தூக்கி வெள்ளிப் பதக்கத்தை வென்றுள்ளார் .அதேசமயம் உலக பளுதூக்குதல் சாம்பியன்ஷிப் போட்டி தாஷ்கண்டில் வருகின்ற டிசம்பர் 17ஆம் தேதி தொடங்குகிறது.

இதில் இந்தியா இரண்டிலும் பங்கேற்கிறது .இதில் 220 கிலோ எடை தூக்கிய இந்திய வீராங்கனை  பூனம் யாதவ் உலக பளுதூக்குதல் சாம்பியன்ஷிப் போட்டியில் 7-வது இடத்தில் உள்ளார். இதையடுத்து 2018 ம் ஆண்டு காமன்வெல்த் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற ஆரோக்கிய அலிஷ் மொத்தம் 214 கிலோ  எடையைத் தூக்கி வெண்கலப் பதக்கத்தை வென்றுள்ளார். கனடாவை சேர்ந்த  மாயா லேலர் மொத்தம் 229 கிலோ எடை தூக்கி காமன்வெல்த் பளுதூக்குதல் சாம்பியன்ஷிப்பில்  தங்கப் பதக்கம் வென்றுள்ளார்.

Categories

Tech |