Categories
தேசிய செய்திகள்

ஒடிசாவில் 246 சிறப்பு பெண் காவலர்கள் நியமனம்.!!

ஒடிசாவில் 246 சிறப்பு பெண் காவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

பெண்கள் எதிர்கொள்ளும் பாலின பாகுபாடு, ஈவ்டீசிஸ், பாலியல் தொந்தரவு உள்ளிட்ட குற்றங்களை தடுப்பதற்காக ஒடிசாவில் 246 சிறப்பு பெண் காவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் மூன்று மாதம் பணியில் இருப்பார்கள். தேவைப்பட்டால் பணிக்காலம் நீட்டிக்கப்படும் என கூறப்பட்டுள்ளது. இந்த பெண்கள் முப்பத்துக்கும் மேற்பட்ட அமைப்புகளில் இருந்து பணிக்கு எடுக்கப்பட்டுள்ளனர்.

Image result for There are 246 special female police  in Odisha.

இதில் கல்லூரி மாணவிகள், கல்லூரி படிப்பை முடித்தவர்கள் மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறையில் பணிபுரிபவர்களும் அடங்குவர். இந்த நிகழ்வில் பேசிய மாநில காவல்துறை இயக்குனர் அபே, “வேலை செய்யும் இடங்களில் பெண்கள் தினந்தோறும் பல்வேறு பிரச்னைகளை எதிர்கொள்கின்றனர். இவற்றிலிருந்து பெண்களை காத்து, அவர்களின் பாதுகாப்புக்கு ஒடிசா காவலர்கள் உறுதுணையாக இருப்பார்கள்” என்றார்.

Categories

Tech |