அட்லி இயக்கத்தில் ஷாருக்கான் நடிப்பில் உருவாகி வரும் பாலிவுட் திரைப்படத்தில் தளபதி விஜய் கெஸ்ட் ரோலில் நடிக்க உள்ளதாக செய்தி பரவி வருகிறது.
தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திர நாயகனாக வலம் வரும் விஜய் தற்போது நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் பீஸ்ட் எனும் திரைப்படத்தில் நடித்துவருகிறார். விறுவிறுப்பாக தயாராகி வரும் இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக பிரபல நடிகை பூஜா ஹெக்டே நடித்து வருகிறார்.
இந்நிலையில் பிரபல இளம் இயக்குனர் அட்லீ தற்போது பாலிவுட் நடிகர் ஷாருக்கானை வைத்து எடுத்து வரும் புதிய படத்தில் விஜய் ஒரு கெஸ்ட் ரோலில் நடிக்க உள்ளதாக சமூக வலைதளங்களில் செய்தி பரவி வருகிறது. இதற்கு முன்னதாக பிரபுதேவாவிற்கு அக்ஷய் குமார் படத்தில் விஜய் கெஸ்ட் ரோலில் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.