முன்னணி நடிகை ரஷ்மிகாவின் வீடியோவை பார்த்து ரசிகர்கள் பலரும் அவரிடம் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவின் முன்னணி கதாநாயகியாக வலம் வரும் ராஷ்மிகா நடிப்பில் கடைசியாக வெளியான புஷ்பா திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. புஷ்பா பட வெற்றியைத் தொடர்ந்து நடிகை ராஷ்மிகா பல படங்களில் கமிட் ஆகியுள்ளார். குறிப்பாக பாலிவுட் படத்திலும் நடித்து வருகிறார்.
இதை தொடர்ந்து அவர் முன்னணி நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகவுள்ள SK20 படத்திலும் கதாநாயகியாக நடிக்க உள்ளார் என்று சில தகவல்கள் கசிந்துள்ளது. இப்படி பிசியான நடிகையாக வலம் வரும் நடிகை ராஷ்மிகா தற்போது ஏர்போர்ட்டில் வரும் போது எடுக்கப்பட்ட வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. இதில் நடிகை ராஷ்மிகா டீசர்ட் மற்றும் மிகச்சிறிய அளவிலான ஷார்ட்ஸ் மட்டுமே அணிந்திருக்கிறார்.
அவரை இப்படி பார்த்த ரசிகர்கள் பலரும் பொது இடத்தில் இப்படியா வருவது? என்று கேள்வி எழுப்பி வருகின்றனர். மேலும் சமூக வலைதளங்களில் வைரலாக பரவிவரும் இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் பலரும் ராஷ்மிகாவை வறுத்தெடுத்து வருகின்றனர்.