வரலாறு காணாத அளவுக்கு டீசல் விலை உயர்ந்துள்ள காரணத்தினால் வரும் ஜூன் 28-ஆம் தேதி கருப்பு தினமாக லாரி உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.
நாளுக்கு நாள் பெட்ரோல் டீசல் விலை புதிய உச்சத்தை தொட்டு வருகின்றது. இதனால் நடுத்தர மக்கள் பெரும் அவதி அடைந்து வருகின்றனர். டீசல், பெட்ரோல் விலை உயர்வு குறித்து பலரும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்ட போதிலும், தொடர்ந்து விலை உயர்ந்து வருகின்றது. இதனை கண்டித்து ஜூன் 28-ஆம் தேதி கருப்பு தினமாக அனுசரிக்க உள்ளதாக லாரி உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.
இது தொடர்பாக அகில இந்திய மோட்டார் டிரான்ஸ்போர்ட் காங்கிரஸின் தமிழக தலைவர் முருகன் வெங்கடாசலம் வெளியிட்டுள்ள செய்தியில்: “தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள ஆட்டோ, கால்டாக்சி, சுற்றுலா வாகனம், குடிநீர், பால், காய்கறி போன்ற அனைத்து வகையான உரிமையாளர்களும், தொழிலாளர்களும் இதில் பங்கேற்கின்றனர். பொதுமக்களும் இதில் இணைந்து ஒன்றிய அரசை எச்சரிக்க வேண்டும் என அழைத்துள்ளது. எங்களது வேலைநிறுத்த போராட்டம் திரும்பப் பெறும் வரை தொடர்ந்து எங்களது வாகனங்களை கருப்புக் கொடியுடன் மற்றும் கறுப்பு போஸ்டருடன் இயக்கப் போகிறோம் எனவும் தெரிவித்துள்ளது.