Categories
உலக செய்திகள்

வரும் 9-ஆம் தேதி முதல் ஆபாச இணையதளங்கள் முடக்கம்.. பிரான்ஸ் அரசு அறிவிப்பு..!!

பிரான்ஸ் நாட்டில் ஆபாச இணையதளங்கள் அனைத்தும் முடக்கப்படவுள்ளதாக  தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலகிலுள்ள, பல நாடுகள் ஆபாச இணையதளங்களை முடக்கிவிட்டது. எனவே, தற்போது பிரான்ஸ் இதுபோன்ற இணையதளங்களுக்கு விரைவில் தடை விதிக்கவுள்ளதாக தெரிவித்திருக்கிறது. அதாவது நாட்டில் மிகச் சிறிய வயதிலேயே, பல சிறுவர்கள் ஆபாச இணையதளங்களை பயன்படுத்துவதாகவும், அதனை தடுப்பதற்காக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதில் e-Enfance மற்றும் Voix de l’Enfant ஆகிய குழந்தைகளுக்கான பாதுகாப்பு நிறுவனங்கள், ஆபாச இணையதளங்களை எதிர்த்து போராடி வருகின்றனர். இதுமட்டுமல்லாமல், அதுபோன்ற இணையதளங்களுக்கு தடை விதிக்குமாறு, அந்த இணையத்தை வழங்குபவர்களுக்கும்  வலியுறுத்தியுள்ளனர்.

எனினும், நீதிமன்ற உத்தரவின்றி, நாங்கள் இந்த நடவடிக்கையை எடுக்க முடியாது என்று இணைய வழங்குனர்கள் தெரிவித்தனர். இந்நிலையில், வரும் 9ஆம் தேதியிலிருந்து நாட்டில் ஆபாச படங்கள் இருக்கும் இணையதளங்கள் தடை விதிக்கப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

Categories

Tech |