செய்தியாளர்களிடம் பேசிய ஓபிஎஸ் ஆதரவாளரான கோவை செல்வராஜ், அண்ணன் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் தொடர்ந்து என்ன சொல்கிறார் ? கட்சி அலுவலகத்திற்கு ஓபிஎஸ் சென்றார்கள், கட்சி சொத்தை எல்லாம் எடுத்துட்டு போய் விட்டார்கள் என்கிறார். கட்சி அலுவலகத்தில் ஒருவாரத்திற்கு முன்பாக 11ஆம் தேதி நிகழ்ச்சிக்கு முன்பாகவே, ஒரு வார காலமாக சசிகலா அம்மையார் அவர்கள் ஒருநாள் சொன்னார்கள்…. நான் அதிமுக அலுவலகத்திற்கு செல்வேன் என்று…
அவர் வந்து விடுவார் என்கின்ற எண்ணத்தில் பயந்து கொண்டு இவர்கள் ஒரு 500, 600 அடி ஆட்களை வைத்துக்கொண்டு அலுவலகத்தில் மது அருந்துவது, மாமிசம் சாப்பிடுவது, பத்திரிக்கைக்கு சொல்ல முடியாத தவறுகள் செய்வது.. இப்படி எல்லாம் கூத்தாடி கொண்டிருந்தார்கள். அந்த நிலைப்பாட்டில் இவர்கள் இருக்கின்றபோது அவர்கள் என்ன செய்தார்களோ, எதை உடைத்தார்களோ, எதை எடுத்தார்களோ என்று தெரியாது.
அப்படிப்பட்ட நிலையில் அன்றைக்கு அண்ணன் ஓ பன்னீர்செல்வம் செல்லுகின்ற போது நானும் இருந்தேன். அலுவலகத்திற்கு சென்றார், அவருக்கென்று அறை இருக்கிறது, அந்த அறையில் அமர்ந்து கட்சிப் பணியை பார்த்தார். நாங்கள் திரும்பி வந்து விட்டோம். எடப்பாடி முதலமைச்சராக இருக்கும்போது திமுக நம்பிக்கை இல்லா தீர்மானம் போட்டு வந்தது, ஓபிஎஸ் 11 எம்எல்ஏக்களோடு இருக்கிறார். என்ன சொன்னார் அன்னைக்கு ? இரண்டு அமைச்சர்களை அனுப்பிவிட்டார், அவரும் அண்ணனுக்கு போன் செய்தார், எனக்கே தெரியும், நானும் கூட இருந்தேன்.
என்ன சொன்னார் ? எப்படியாவது இந்த ஆட்சியை காப்பாற்ற வேண்டும். நீங்கள் 11 எம்எல்ஏ உடன் நீங்கதான் இருக்க வேண்டும், நீங்க தான் செய்ய வேண்டும், நீங்கள் தான் காப்பாற்ற வேண்டும், அம்மா ஆட்சி என்று சொன்னார். அவர் எந்த நிபந்தனையும் இல்லாமல் 11 பேரை ஆதரித்து, நான்கரை ஆண்டு காலம் ஆட்சியை நடத்துவதற்கு உங்களுக்கு முழுமையாக ஒத்துழைத்தாரே அது உங்களுக்கு துரோகமா? உங்களை முதலமைச்சர் வேட்பாளராக அறிவித்தார் அது துரோகமா? எதிர்க்கட்சி தலைவராக பெருந்தன்மையாக உங்களைத் தேர்ந்தெடுத்தாரே அது துரோகமா? என்ன துரோகம் செய்தார் ? என கேள்வி எழுப்பினார்.