கொரோனா காரணமாக உயிரிழந்தவர்களின் முகத்தை பார்க்க உறவினர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது என தமிழக அரசு உயர் நீதிமன்றத்தில் தகவல் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் தொற்று காரணமாக தமிழகம் முழுவதும் தளர்வுகள் அற்ற முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் பல மாவட்டங்களில் இந்த ஊரடங்கு காரணமாக தொற்று குறைந்து கொண்டு வருகின்றது. இருப்பினும் தமிழகத்தில் 400க்கும் மேற்பட்ட உயிரிழப்புகள் ஏற்பட்டுக் கொண்டுதான் இருக்கின்றது.
முன்பெல்லாம் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் உடலை சுகாதாரத் துறையே தகனம் செய்யும். ஆனால் தற்போது உரிய பாதுகாப்பு நடவடிக்கைகளுடன் உறவினர்களிடம் உடல்கள் ஒப்படைக்கப்பட்டு இறுதி சடங்கு செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் முகத்தை பார்க்க உறவினர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது என தமிழக அரசு உயர் நீதிமன்றத்தில் தகவல் தெரிவித்துள்ளது.