Categories
உலக செய்திகள்

ஒரு வருஷமா வரல… இப்ப எப்படி வந்துச்சு?… குழப்பத்தை தீர்த்த பேத்தி… வருத்தத்தில் குடும்பத்தினர்…!

கொரோனா காரணமாக ஒரு வருடமாக வீட்டிலேயே பாதுகாப்பாக இருந்த முதியவருக்கு தொற்று ஏற்பட்டது குடும்பத்தினருக்கு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இங்கிலாந்திலுள்ள ப்லாக்ஸ் விச் என்ற பகுதியை சேர்ந்தவர் 90 வயதுடைய பீட்டர் ஷார்ட் என்ற முதியவர். உலகம் முழுவதும் பரவி வந்த கொரோனா நமக்கும் பரவி விடுமோ என்ற அச்சத்தில் இவர் கடந்த 2020 ஆம் ஆண்டு முதல் ஓராண்டு காலமாக வீட்டை விட்டு வெளியே வராமல் உள்ளேயே இருந்த. இந்நிலையில் அவரை தடுப்பூசி செலுத்துவதற்காக அவரது மகன் கடந்த மாதம் 13ம் தேதி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார்.

அங்கு அவருக்கு கோரானா தடுப்பூசி போடப்பட்டது. அதன்பின் ஜனவரி 16 ஆம் தேதி ஜோசப்  உடல்நலம் பாதிக்கப்பட்டார். மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட ஜோசப்பிற்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனை அறிந்த உறவினர்கள் அதிர்ச்சி அடைந்தனர். ஏனென்றால் கொரோனா தாக்கம் காரணமாக ஒரு வருடம் வீட்டிலேயே இருந்தவருக்கு எப்படி தொற்று ஏற்பட்டிருக்கும் என்று குடும்பத்தினர் குழப்பத்தில் இருந்தனர்.

அப்போது பீட்டரின் பேத்தியான இமா லௌட்ஸ் தாத்தாவை மருத்துவமனைக்கு அழைத்து செல்லும்போது தொற்று ஏற்பட்டிருக்கும் என்று கூறினார்.மேலும் மருத்துவமனையில் எல்லா பொருட்களும் கிருமி நீக்கம் செய்யப்பட்டிருந்த நிலையில், தாத்தா தொட்ட ஒரு பேனா கிருமி நீக்கம் செய்யப்படாத தால் தாத்தா தொற்றுக்கு ஆளாகி இருக்கலாம் என்று கூறினார். இதனைக் கேட்ட ஒரு குடும்பத்தினர் ஒரு வருடம் பாதுகாப்பாக இருந்த ஜோசப்பிற்கு தொற்று பரவியதால் மிகவும் வருத்தத்தில் உள்ளனர்.

Categories

Tech |