Categories
சினிமா

ஹீரோவான நம்ம கோமாளி பட இயக்குனர்…. வைரலாகும் அசத்தல் புகைப்படம்….!!!!

கடந்த 2019-ஆம் வருடம் வெளியாகி ரசிகர்களிடம் அதிக வரவேற்பை பெற்ற கோமாளி திரைப்பட இயக்குனரின் புதிய திரைப்படத்திலிருந்து ஒரு புகைப்படம் வெளியாகியுள்ளது.

நடிகர் ஜெயம்ரவி, யோகிபாபு மற்றும் நடிகை காஜல் அகர்வால் நடித்து கடந்த 2019 ஆம் வருடத்தில் வெளியான கோமாளி திரைப்படம் ரசிகர்களிடம் அதிக வரவேற்பை பெற்றது. இத்திரைப்படத்தை இயக்கிய இயக்குனர் பிரதீப் ரங்கநாதன், தற்போது ஒரு புதிய படத்தை தொடங்கியிருக்கிறார்.

இத்திரைப்படத்தை, ஏஜிஎஸ் கவர்மெண்ட் என்ற முன்னணி தயாரிப்பு நிறுவனம் தயாரிக்கிறது. இத்திரைப்படத்தின் இயக்குனரான பிரதீப் ரங்கநாதன் தான் கதாநாயகனாக நடிக்கிறார்.  இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையமைப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இத்திரைப்படத்தில் நடிகர் சத்யராஜ், நடிகை ராதிகா மற்றும் யோகி பாபு போன்றோரும் நடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு வேகமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நடிகை ராதிகா, டிவிட்டரில், “நடிகர் சத்யராஜ் அவர்களுடன் சேர்ந்து நடிப்பது, எப்போதும் மகிழ்ச்சியாகவும் அதிக உரையாடல்களுடனும் இருக்கிறது. பிரதீப் ரங்கநாதன் மற்றும் ஏஜிஎஸ் உடன் சேர்ந்து சிறப்பான வழியில் புத்தாண்டு ஆரம்பித்திருக்கிறது” என்று பதிவிட்டு படப்பிடிப்பு தளத்தில் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை பகிர்ந்திருக்கிறார்.

Categories

Tech |