Categories
மதுரை மாவட்ட செய்திகள்

கஷ்டப்பட்ட முதியவர்… வாட்ஸ்அப்பில் வந்த தகவல்… ஓடோடி வந்து உதவிய கலெக்டர்!

குதிரையை வைத்து சம்பாதித்து வந்த முதியவர் ஊரடங்கினால் உணவின்றி தவிப்பதாக வாட்ஸ்அப்பில்  கிடைத்த தகவலின் அடிப்படையில் ஆட்சியர் முதியவருக்கு உதவி புரிந்துள்ளார்

நாடு முழுவதும் ஊரடங்கு நீடிக்கப்பட்டுள்ளதால் வேலையின்றி வருமானமின்றி பலதரப்பட்ட மக்கள் வறுமையில் சிக்கி தவிக்கின்றனர். அவ்வகையில் மதுரை வடக்கு வட்டத்திற்கு உட்பட்ட கட்டபொம்மன் நகரில் குதிரை வளர்க்கும் குதிரை காந்தி என்ற முதியவர் தனது மூன்று குதிரைகளோடு வாழ்ந்துவருகிறார். குதிரைகள் மூலம் கிடைத்து வந்த வருமானத்தில் குதிரை காந்தி தனது மனைவியுடன் வாழ்க்கை நடத்தி வந்தார். இந்நிலையில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் வறுமையின் பிடியில் சிக்கி பட்டினியால் மிகவும் அவதிப்பட்டு வந்துள்ளார் குதிரை காந்தி. இது குறித்த தகவலை தன்னார்வலர்கள் வாட்ஸ்அப் வாயிலாக மதுரை மாவட்டத்தின் ஆட்சியர் வினய் கவனத்திற்கு தெரியப்படுத்தியுள்ளனர்.

இதனை அடுத்து மாவட்ட ஆட்சியர் வினய் ஊரடங்கு முடியும்வரை தேவைப்படும் உணவு மற்றும் மளிகை பொருட்களை குதிரை காந்தி குடும்பத்திற்கு வழங்குவதாக தெரிவித்ததோடு அவர் வளர்க்கும் குதிரைகளுக்கும் தேவையான தீவனம் வழங்குவதாக ஆட்சியர் வினய் தெரிவித்துள்ளார். அதனடிப்படையில் நேற்று அரிசி, சமையல் எண்ணெய் உள்ளிட்ட மளிகைப் பொருட்களும் காய்கறிகளும் அதனுடன் குதிரைக்கு தேவையான தீவனங்களையும் மதுரை வடக்கு வட்டாட்சியர் சுரேஷ் பிரெடரிக் குதிரை காந்தியிடம் நேரில் சந்தித்து கொடுத்துள்ளார்.

Categories

Tech |