கலெக்டர் அலுவலகத்தின் முன்பாக உலக மக்கள் தொகை தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு பிரச்சார வாகனம் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கலெக்டர் அலுவலகத்தின் முன்பாக உலக மக்கள் தொகை தினத்தை முன்னிட்டும், நோய் தடுப்பு மருந்து துறை சார்பாகவும் விழிப்புணர்வு பிரச்சார வாகனம் தொடங்கும் நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. இதனையடுத்து கலெக்டர் ஸ்ரீதர் இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பிரசார வாகனத்தை கொடியசைத்து தொடங்கி வைத்துள்ளார். அதன்பின் இத்தினத்தையொட்டி மாவட்டத்தில் மக்கள்தொகை கட்டுப்படுத்துவது தொடர்பாக விழிப்புணர்வு வாகனம் தொடங்கப்பட்டு பேருந்து நிலையம், பொதுமக்கள் அதிகமாக கூடும் இடங்களில் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறனர்.
இதனால் பொதுமக்கள் சிறு குடும்ப நெறிமுறைகளை பின்பற்றவும், திருமணத்திற்கு ஏற்ற வயதில் திருமணம் செய்வது பற்றிம் தெரிவித்துள்ளனர். இதனை தொடர்ந்து முதல் குழந்தை பேறு காலத்தில் தாமதப்படுத்த மேற்கொள்ள வேண்டி குடும்ப நல முறை கட்டுப்பாடுகள் மற்றும் முதல் குழந்தைக்கும் இரண்டாவது குழந்தைக்கும் இடையே கால இடைவெளி அவர்கள் தெரிந்து கொள்ளுமாறு விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர். மேலும் மக்கள் தொகை பெருக்கத்தை கட்டுப்படுத்துவதற்காக இம்மாவட்ட நிர்வாகம் மேற்கொள்ளும் அனைத்து நடவடிக்கைகளுக்கு பொதுமக்கள் தங்களின் முழு ஒத்துழைப்பை வழங்க வேண்டும் என கலெக்டர் கூறியுள்ளார்.