Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

இனி தூய்மையாக வைப்போம்… குப்பைகளை பிரித்து வாங்க வேண்டும்… கலெக்டரின் அதிரடி உத்தரவு…!!

கலெக்டர் அலுவலகத்தில் வைத்து ஊரக வளர்ச்சி துறை சார்பாக ஆய்வுக் கூட்டம் நடைபெற்றுள்ளது.

திருப்பத்தூர் மாவட்டத்தில் அமைந்திருக்கும் அனைத்து கிராம ஊராட்சிகளிலும் தூய்மை பணியாளர்கள் வீடு வீடாக சென்று மக்காத குப்பை மற்றும் மக்கும் குப்பை என பிரித்து வாங்க வேண்டும் என கலெக்டர் கூறியுள்ளார். இந்நிலையில் கழிவுநீர் கால்வாய்களில் பிளாஸ்டிக் கழிவுகள் கழிப்பதைத் தவிர்க்க வேண்டும் எனவும் செப்டம்பர் மாதத்தின் இறுதிக்குள் இத்திட்டம் மாவட்டத்தில் முழுமையாக செயல்பட வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார். இதனை அடுத்து இம்மாவட்டத்தில் உள்ள ஊராட்சிகளில் 100% வீடுகளுக்கு நேரடியாக சென்று மக்காத குப்பை மற்றும் மக்கும் குப்பைகளை பிரித்து வாங்குவதில் சிறந்த மூன்று ஊராட்சி செயலர்களுக்கு அக்டோபர் மாதம் 2-ஆம் தேதி அன்று சான்றிதழ் வழங்கப்படும் என கலெக்டர் தெரிவித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து இம்மாவட்டத்தை சுகாதாரமாக பேணிக்காத்து குப்பைகள் இல்லாத தூய்மை நகரமாக மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். பின்னர் அனைத்து ஊராட்சிகளிலும் தெருக்கள் முழுமையாக பணிநீக்கம் செய்யப்பட்டு எறியவும், குடிநீர் குழாய்களில் பழுதுகளை சரி செய்து குடிநீர் வீணாவதை தடுக்கும் மற்றும் குடிநீர் முழுமையாக வழங்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கலெக்டர் தெரிவித்துள்ளார்.மேலும் பருவமழை தொடங்க இருப்பதால் வரத்து கால்வாய்களை சுத்தம் செய்து மழைநீர் செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என கலெக்டர் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |