மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் முன்பு திடீரென தம்பதியினர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
சேலம் மாவட்டத்தில் உள்ள கந்தம்பட்டி மூலப்பிள்ளையார் கோவில் தெருவில் சக்கரவர்த்தி இருசான் – சாரதா தம்பதிகள் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு கிஷோர் மற்றும் பிரசாந்த் என்ற 2 மகன்கள் இருக்கின்றனர். இந்த தம்பதிகளுக்கு சொந்தமான நிலத்தில் வேறு ஒருவர் காம்பௌண்ட் சுவர் கட்டியதாக காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
அந்தப் புகாருக்கு காவல்துறையினர் எந்தவித நடவடிக்கையும் எடுக்காததால் இந்த தம்பதிகள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் முன்பு திடீரென தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனை அடுத்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் முன்பு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவலர்கள் அந்த தம்பதிகளுடன் சமரச பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்துள்ளனர். இதன் பிறகு அந்த தம்பதிகள் தர்ணா போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றுள்ளனர்.