Categories
தேனி மாவட்ட செய்திகள்

இத மட்டும் சாப்பிட கூடாது… நோய் உங்களுக்கும் பரவும்… கலெக்டரின் முக்கிய அறிவுரை…!!

வீட்டில் உள்ள பறவை இனங்களை கையாளும் வழிமுறைகள் குறித்தும், நோய் தடுப்பு முறைகள் குறித்தும் மாவட்ட கலெக்டர்அறிவுரை வழங்கினார்.

இந்தியாவில் உள்ள பல்வேறு மாநிலங்களில் பறவை காய்ச்சலானது பரவிய நிலையில் கேரளாவில் உள்ள கோழி மற்றும் வாத்துகளை இந்நோய் அதிகளவில் தாக்கியுள்ளது. இதனால் அதிகாரிகள் இந்த நோய் தாக்கப்பட்ட பறவை இனங்களை தீவைத்து அழிக்கின்றனர். இந்நிலையில் கேரள மாநிலத்தில் இருந்து தேனி மாவட்டம் வழியாக குமுளி, போடிமெட்டு, கம்பம்மெட்டு போன்ற மூன்று பாதைகளில் வாகனங்கள் இயங்கி வருகின்றன. ஆனால் குமுளி மலை சாலையில்  பணிகள் நடைபெற்றுக் கொண்டிருப்பதால் வாகனப் போக்குவரத்தானது தற்போது கம்பம்மெட்டு மற்றும் போடிமெட்டு மலைப்பாதைகளில் மட்டுமே இயக்கப்பட்டு வருகின்றன.

அதோடு இவ்வழியாக வரும் வாகனங்கள் அனைத்திலும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு அனுப்பப்படுகிறது. இந்நிலையில் மாவட்ட கலெக்டர் பல்லவி பல்தேவ் தலைமையில் பறவைக்காய்ச்சல் ஏற்படுவதை தடுப்பது குறித்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அதிகாரிகளுக்கு மாவட்ட கலெக்டர் பல்வேறு அறிவுரைகளை கூறியுள்ளார். அதாவது தமிழகத்தில் இருந்து கேரளாவுக்கு கொண்டு செல்லும் பெரும்பாலான பொருட்களை தவிர்க்குமாறும், கேரள மாநிலத்தில் இருந்து எந்தவித பொருட்களையும் தமிழகத்திற்கு கொண்டு வரக்கூடாது என்றும் அறிவுறுத்தியுள்ளார்.

மேலும் நோயை தடுப்பதற்கு தேவையான மருந்துகளை போதிய அளவில் வைத்திருக்குமாறு உத்தரவிட்டுள்ளார். இதனையடுத்து பறவைகளை மட்டும் தாக்கும் இந்த வைரஸ் கிருமி சில சமயங்களில் நோய் பாதித்த பறவைகளை சாப்பிடும் மனிதர்களிடமும் நோய் பாதிப்பை ஏற்படுத்தும் அபாயம் உள்ளது. இதனை தொடர்ந்து கால்நடை பராமரிப்பு துறை அதிகாரிகள் வீட்டில் வளர்க்கும் வாத்து, கோழி மற்றும் கொக்கு போன்ற பறவைகளை நோய் தாக்காமல் எச்சரிக்கையாக பார்த்துக்கொள்ள வேண்டும் எனவும், அவைகளுக்கு அளிக்கப்படும் தீவனம் மற்றும் குடிநீரை சுத்தமான தட்டில் வைத்துக் கொடுக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளார்.

மேலும் சேவல் சண்டை நடக்கும் இடங்களுக்கு வீட்டு சேவலை கொண்டு செல்லக் கூடாது என  கூறியுள்ளார். இதனைத் தொடர்ந்து பொதுமக்கள் முழுமையாக அவித்த முட்டை அல்லது பொரித்த ஆம்லெட் மட்டுமே சாப்பிட வேண்டும் என்றும், மாறாக பச்சை முட்டையை யோ அல்லது ஆபாயில் சாப்பிடக்கூடாது. ஏனெனில் கோழி இறைச்சியில் உள்ள கிருமியானது சமைக்கும்போது அழிந்து விடும். ஆனால் முட்டையை பச்சையாகவோ அல்லது அரை வேக்காட்டிலோ சமைத்து சாப்பிடும் போது அதிலுள்ள கிருமிகள் அழியாது மனிதரிடமும் பரவும் அபாயம் ஏற்பட்டு விடும் என கூறியுள்ளார்.

Categories

Tech |